தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் 30000 காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப கோரிக்கை!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பாமக நிறுவனனர் ச.ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 3454 பேருந்துகள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3233 பேருந்துகள் இயங்குகின்றன. இந்த பேருந்துகளை இயக்க 8487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்த ஆண்டு முதல் தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமும் 500 பேருந்துகள் என்றால் ஒரு ஆண்டுக்கு 29.70 லட்சம் முறை சென்னையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும் இதே நிலைமை தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். அதனால் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள 30000க்கு மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் ச. ராமதாஸ் அரசிடம் அறிவுறுத்தி இருக்கிறார்.