AUGUST 2023 தட்டச்சு தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு:
தேர்வு அறைக்குள் செல்லும் முன், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஹால் டிக்கெட் ஆகியவற்றை கையில் எடுத்துக் கொள்ளவும்.
தேர்வு ஆரம்பமாகும் முன்னர், நேரம் கிடைத்தால் தங்களது மெசினில், சரியாக அனைத்தும் இயங்குகிறதா என ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும்.
தேர்வு அறைக்குள் சென்றவுடன் அருகில் இருப்பவர்களுடன் பேசாமல் அமைதி காக்கவும்.
தேர்வு அறையில் வழங்கப்படும், வருகைப் பதிவேட்டில் (Attendance) கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும்.
முதலில், ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் (Statement & Letter) நடைபெறும். இரண்டாவது வேகம் (speed) நடைபெறும்.
தேர்வு அறையில் கொடுக்கப்படும் விடைத்தாளை சரிபார்த்து, மெசினில் பொருத்திவிட்டு தட்டச்சு செய்ய தயார்நிலையில் வைத்துக்கொண்டு, wrapper Sheet ஐ நிரப்பவும்.
Wrapper sheet நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதை அந்தந்த அறை கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும்.
Wrapper sheet ல் ஒட்டப்பட்டுள்ள துண்டு சீட்டில் மட்டுமே தங்களது பதிவு எண்ணை, Hall Ticket ஐ பார்த்து, சரியாக நிரப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படாது.
முதல் தாள் அல்லது இரண்டாம் தாள் தட்டச்சு செய்யும்போது, எதிர்பாராத விதமாக தட்டச்சு எந்திரத்தில் (Typewriting Machine) ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதை அந்தந்த அறை கண்காணிப்பாளரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
தட்டச்சு செய்துமுடித்த பின்னர், விடைத்தாளை Wrapper Sheet க்குள் முறைப்படி வைத்து நூலினால் கட்டி, மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, (Supervisor) அறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கவும்.
தங்களது பொருட்களுடன், ஹால்டிக்கெட், வினாத்தாள் (முதல் தாள், இரண்டாம்தாள்)
ஆகியவற்றை மட்டும் வெளியே எடுத்து வரவும்.
தேர்வில், அனைவரும் வெற்றி பெற பயிற்சி சார்பாக, வாழ்த்துக்களை💐💐 தெரிவித்துக் கொள்கிறோம். . .
டைப் ரைட்டிங் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகளின் கவனத்திற்கு:
தேவையான பொருட்களை எடுத்து வர வேண்டும்.
🌟காலையில் வருபவர்கள் காலை சிற்றுண்டி முடித்து விட்டு வர வேண்டும்.
🙏🏾மத்தியான தேர்வுக்கு வருபவர்கள் மத்தியானத்துக்கு தேவையான உணவுகளை எடுத்து வர வேண்டும்.
🙏🏾உங்களுக்கு என்ன நேரம் கூறினார்களோ, அந்த நேரத்திற்குமுன் கண்டிப்பாக வரவேண்டும்..
🙏🏾தேர்வு மையத்திற்கு உள்ளே உறவினர்களுக்கு மற்றும் உடன் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது
மொபைல் அனுமதி கிடையாது