TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்!

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதித்தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தகுதி தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்தது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது நியமனத்தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நியமன தேர்வு நடத்தப்படும் இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பலரும் மனு தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தும் இன்னும் பணி நியமன வழங்கப்படவில்லை. பணிக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இவர்கள் நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாதது குறித்து அரசு விரிவான பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *