இந்த மாத கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – தமிழக அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்!
அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை முன் ஒரு நாளைக்கு முன்பாக அக்டோபர் 14ம் தேதி வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் சென்ற மாதம் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவர்களுக்கு ரூபாய் 1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதில் விண்ணப்பம் பெறப்பட்ட நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பங்கள் தவறியவர்கள் உரிமைத்தொகை தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது . அதனை அடுத்து ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ரூ.1000/- வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்பாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் வர வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆயிரம் ரூபாய் பெரும் மகளிரை மகிழ்ச்சியில் உள்ளாக்கி உள்ளது.