பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 500 ரூபாய்க்கு கீழ் குறைந்த சிலிண்டர் விலை – அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் சிலிண்டர் விலையானது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், கோவா அரசு மக்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்:
நாடு முழுவதும் மக்களுக்கு சிலிண்டர் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் சிலிண்டர் விலையானது 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொது மக்கள் சிலிண்டர் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். விலை உயர்வை கருத்தில் கொண்டு அரசு சார்பில் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. அதனால் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை ரூ. 200 குறைத்தது.
அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கோவாவில் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டு தற்போது 14.2 கிலோ சமையல் எரிவாயு விலை ரூ. 903-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதோடு கோவா அரசு ரூ.275 மானியம் கொடுப்பதால், வெறும் ரூ. 428 – க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. அந்தியோதயா அன்ன யோஜனா அட்டையுடன் பெயர் இணைக்கப்பட்டுள்ள நபர்கள் இச்சலுகையைப் பெறலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.