தமிழக அரசு பொங்கல் பரிசு 2024 அறிவிப்பு: நாளை மறுநாள் வெளியாக அதிக வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல் – TN Pongal Gift 2024 Announcement Important Update

தமிழக அரசு பொங்கல் பரிசு 2024 அறிவிப்பு: நாளை மறுநாள் வெளியாக அதிக வாய்ப்பு! வெளியான முக்கிய தகவல் – TN Pongal Gift 2024 Announcement Important Update

TN Pongal Gift 2024 Announcement Important Update

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு, “தமிழக அரசு பொங்கல் பரிசு 2024”  குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

TN Pongal Gift 2024 Announcement Important Update

பொங்கல் பண்டிகை:

தமிழக மக்கள் இந்த நிலையில், 2024 ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கின்றனர். பேரிடர் பகுதிகளில் நிவாரணம் வழங்குவதை காரணமாக வைத்து, மாநிலத்தின் மற்ற பகுதி மக்கள் பாதிக்கப்பட கூடாது.

இந்த சூழலில், மிக்ஜாம் புயலால்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு, 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்து, அவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.

பொங்கல் பரிசு 2024:

தமிழ்நாடு அரசு சார்பில், இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூபாய் 1000 , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி ஆலோசனை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து ஜனவரி 3-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:

அதே போல், ஜனவரி மாதத்திற்கான “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய்”, வரும் 10-ந் தேதி வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

TN Pongal Gift 2024 Announcement Important Update

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *