தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்கள்! வெளியாகியுள்ள தகவல்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்கள்! வெளியாகியுள்ள தகவல்

TN School Qua rterly Exam Leave Days: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான 2024-2025 ஆண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

மாணவர்கள் இவ்வாண்டின் முதல் பருவத்தில் கற்ற பாடங்களில் இருந்து வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை வெளியானதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே முக்கிய எதிர்பார்ப்பு, காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் இருக்கும் என்பதுதான்.

காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்:

காலாண்டு தேர்வுகள் முடிந்தவுடன் செப்டம்பர் 28ஆம் தேதி பள்ளிகள் விடுமுறைக்கு செல்லும். இதற்காக, மாணவர்களுக்கு மொத்தமாக 5 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் நடைமுறையில் 3 நாட்கள் மட்டுமே முழுமையாக விடுமுறையாக அமையும். விடுமுறை அட்டவணை பின்வருமாறு அமைந்துள்ளது:

  • செப்டம்பர் 28 (சனிக்கிழமை): விடுமுறை நாள்
  • செப்டம்பர் 29 (ஞாயிறு): வார இறுதி விடுமுறை
  • செப்டம்பர் 30 (திங்கட்கிழமை): விடுமுறை நாள்
  • அக்டோபர் 1 (செவ்வாய்க்கிழமை): விடுமுறை நாள்
  • அக்டோபர் 2 (புதன்கிழமை): காந்தி ஜெயந்தி – அரசு விடுமுறை

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை 5  நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு இரண்டாம் பருவ பாடங்கள் தொடங்கும்.

மாணவர்கள் ஏமாற்றம்

விடுமுறை நாட்கள் குறைவாக உள்ளதால், வெளியூர் செல்லவிரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பாடம் மற்றும் தேர்வின் அழுத்தம் அனுபவிக்கும் மாணவர்களுக்கு அதிக நேரம் ஓய்வுக்கு அளிக்கப்படவில்லை என்பது எதிர்மறையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை , மற்ற 2 நாட்கள் தவிர அதிகமான விடுமுறை அளிக்கப்படாததாலும், வெளியூர் சுற்றுலா திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொதுவாக, காலாண்டு விடுமுறைகள் மாணவர்கள் ஓய்வெடுத்து, புதிய பருவத்தை சுறுசுறுப்பாக தொடங்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, குறைந்த நாட்கள் விடுமுறை மாணவர்களை சிறிது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு குறைந்த காலாண்டு விடுமுறை நாட்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறிது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *