டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை நாளை எழுத உள்ள தேர்வர்கள் – இதை படிக்காம தேர்வுக்கு செல்ல வேண்டாம்! முக்கிய வழிமுறைகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை நாளை எழுத உள்ள தேர்வர்கள் – இதை படிக்காம தேர்வுக்கு செல்ல வேண்டாம்! முக்கிய வழிமுறைகள்

TNPSC Group 2 Exam Follow Instructions: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் 14 நாளை குரூப் 2 தேர்வை நடத்த உள்ளது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து TNPSC அறிவித்துள்ளது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.

தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இதை படிக்காம தேர்வர்கள் தேர்வுக்கு செல்ல வேண்டாம். இதை படித்து தேர்வர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்.

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை.

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)

  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும் தேர்வு தொடங்கும் முன் – 1, முடிந்த பின் 1, ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் (Left hand Thumb Impression) தேர்வு முடிந்த பின் வைக்க வேண்டும். அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்படவும். பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR-ஐ கையாளவும்.

5) உங்களுக்குக் கொடுக்கப்படும் வினாத்தாள் புத்தகத்தினைப் (Question Booklet) பிரிப்பதற்கு முன்பு அதில் அனைத்துப் பக்கங்களும் விடுபடாமல் உள்ளதா? என்பதனை உறுதி செய்த பின்னர் வினாத்தாள் புத்தகத்தின் எண்ணை OMR-ல் நிரப்பவும். பின்னர், Question paper Booklet எண்ணினைப் பிழையின்றி, சரியாக எழுதி உரிய வட்டங்களில் Shade செய்யவும்.

6) எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் Shade செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் Shade செய்து விடுங்கள். . Shade செய்வதற்கு முன் வினா எண்ணினையும், Option-யும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக Shade செய்யவும்.

7) A, B, C, D, E – ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை Shade செய்யவும் வேண்டும். (இதற்கு 12:30 – 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்). கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை *தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு OMR-ஐப் பூர்த்தி செய்யவும்.*

8) Shade செய்ய கண்டிப்பாக கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். .

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் passport அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, Register Number, கையொப்பம், நுழைவுச்சீட்டின் Xerox Copy, மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் Xerox copy உடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

10) நுழைவுச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இடம் பெற்றுள்ள இடத்தில் கையொப்பம் பெற்று நுழைவுச்சீட்டினைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்வர்கள்இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றி தேர்வர்கள் சிறப்பாக தேர்வு எழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *