சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வெளியாகியுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! உடனே அப்ளை செய்ய

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வெளியாகியுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! உடனே அப்ளை செய்ய

TN MTC Apprentices Job: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 தொழில் பழகுநர் பயிற்சி காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

பணியிடங்கள் விவரம்:

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 தொழில் பழகுநர் பயிற்சி காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள்

  • மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500
  • மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் – 250
  • மெக்கானிக்கல் டீசல் – 90
  • ஆட்டோமொபைல் -32
  • எலக்ட்ரிக்கல் – 32
  • வெல்டர் – 30
  • ஃபிட்டர் – 52
  • டர்னர் – 4
  • பெயிண்டர் – 10

வயது விவரங்கள்

நீங்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 காலிப் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்த சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 காலிப் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ ITI பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் மாநகர போக்குவரத்து கழக தொழில் பழகுநர் பயிற்சி பதவிகளுக்கு மாத சம்பளம் ஊக்கத்தொகையாக ரூ. 14,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணம் கிடையாது. ST/SC/ PWD விண்ணப்ப கட்டணம் கிடையாது. எனவே இவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

இந்தப் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 காலிப் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 10 செப்டம்பர் 2024

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26 செப்டம்பர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

You may also like...

1 Response

  1. Esakkidurai says:

    Diploma automobile engineering

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *