
மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்! ரூ.1000 பெற உடனே இதைச் செய்யுங்க || Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026
Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாகச் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இன்னும் பலருக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற குறை இருந்தும் வருகிறது. விண்ணப்பித்தும் பணம் வராதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். அவர்களுக்குத் தமிழக அரசு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்த முழுமையான விவரங்களையும், மேல்முறையீடு செய்யும் வழிமுறைகளையும் இங்கே விரிவாகக் காண்போம்.
அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசினார். அப்போது அவர், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கவலைப்பட வேண்டாம். தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு (Appeal) செய்ய அரசு வாய்ப்பளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை அறிவது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்குக் கணினியில் உள்ள தரவுகளே முக்கியக் காரணம். வருமான வரி செலுத்துபவர்கள், வீட்டில் நான்கு சக்கர வாகனம் (Car/Jeep) வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள், அல்லது குடும்பத்தில் அரசு ஊழியர்கள் இருப்பது போன்ற காரணங்களால் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால், “எங்களிடம் காரே இல்லை, இருந்தாலும் விண்ணப்பம் ரிஜெக்ட் ஆகிவிட்டது” என்று புலம்பும் பெண்கள் ஏராளம். அத்தகையவர்களுக்கான தீர்வு இதோ:
கோட்டாட்சியர் அலுவலகம் செல்லுங்கள்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், உங்கள் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு (RDO Office) நேரில் செல்ல வேண்டும்.
காரணத்தைக் கேளுங்கள்: அங்குள்ள அதிகாரிகளிடம் உங்கள் விண்ணப்ப எண் அல்லது ஆதார் எண்ணைக் கொடுத்து, “என் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது?” என்ற காரணத்தைத் துல்லியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
உடனடி மேல்முறையீடு: அதிகாரிகள் சொல்லும் காரணம் உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் (உதாரணமாக, கார் இல்லை ஆனால் கார் இருப்பதாகக் காட்டினால்), அங்கேயே அதற்கான ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யுங்கள்.
மீண்டும் கள ஆய்வு – பணம் நிச்சயம்!
நீங்கள் மேல்முறையீடு செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது குறித்து அமைச்சர் கூறுகையில், “மேல்முறையீடு செய்யும் மனுக்களின் மீது மீண்டும் ஒருமுறை நேரடி கள ஆய்வு (Field Verification) மேற்கொள்ளப்படும்.
அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்வார்கள். அதில் நீங்கள் உண்மையாகவே தகுதியானவர் என்று உறுதி செய்யப்பட்டால், உங்களின் பெயர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படும். விடுபட்ட மாதங்களுக்கான தொகையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
விண்ணப்பத்தார்கள் கவனிக்க வேண்டியவை
இந்த வாய்ப்பு தகுதியிருந்தும் தவறுதலாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே.
உண்மையிலேயே வீட்டில் கார் இருந்தாலோ அல்லது அரசு வேலையில் இருந்தாலோ மேல்முறையீடு செய்தாலும் பலன் இருக்காது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தகுதியான எவரும் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

எனவே, இதுவரை ரூ.1000 வராத இல்லத்தரசிகள், சோர்ந்து போகாமல் உடனே உங்கள் பகுதி கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகுங்கள். இந்தத் தகவலை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்களும் பயன்பெற உதவுங்கள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
