தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு!
தமிழக காவலர்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
தமிழக அரசின் சார்பில் காவலர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது காவலர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காவலர்களின் நூறு குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30,000 வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையராகங்களில் பணியாற்றும் 200 குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகைக்காக கூடுதலாக 2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கல்வி உதவித்தொகை மட்டுமல்லாமல் காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி பரிசுத்தொகையும் ரூபாய் 28.29 லட்சத்திலிருந்து ரூபாய் 56 58 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.