
தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி!
தமிழகத்தில் ஆன்லைன் காலாண்டு தேர்வு – ஆசிரியர்கள் அதிருப்தி!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் தேர்வு குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் தேர்வு:
2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் அடிப்படை அறிவை வளர்க்கும் விதமாக தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் காரணமாக தற்போது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் தேர்வுகளின் வாயிலாக மாணவர்களின் எழுத்துத்திறன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், மேலும் ஆன்லைன் தேர்வு சமயத்தில் இணையதள பிரச்சனை, செல்போன் முடங்குதல், மாணவர்கள் அதிக நேரம் மொபைல் போனை பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதனால் அரசு இந்த ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது