பள்ளி, கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு பெண்கள் மற்றும் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய கல்வித்துறையானது அறிவித்துள்ளது.
சிசிடிவி கேமரா:
சமீப காலங்களாக கல்வித்துறையில், மோசமான நிகழ்வுகள் நடந்து வருவது செய்தி குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. இதே போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மாணவர் ஒருவர் ராகிங் காரணமாக உயிரிழந்துள்ளார். இதே போல் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. இதன்பிறகு மத்திய கல்வித்துறையானது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்கான சிசிடிவி கேமரா செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும், தனியார் பள்ளிகள் சொந்த செலவில் சிசிடிவி கேமராக்களை பொறுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.