இன்றைய காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெரிய பெரிய கடைகள் ஷாப்பிங் மால்களில் மட்டுமே UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிறிய கிராமங்களில் இருக்கும் காய்கறி கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையானது இணைய சேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய சேவை இல்லாமலும் பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று RBI தெரிவித்துள்ளது. அதன்படி, இணைய சேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய அதிகபட்ச தொகையாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிநிலை கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இணைய சேவை இல்லாமல் UPI மூலம் பணபரிமாற்றம் செய்வதற்கான அதிகப்பட்ச தொகை ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் GPAY, PhonePay உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.