தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலாண்டு விடுமுறை:
தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை துவங்கி செப்டம்பர் 27ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இதனிடையே, காலாண்டுத்தேர்வு முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அனைத்து மாணவர்களுக்கும் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்தாண்டு 5 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலாண்டு விடுமுறை தினத்தை அதிகரிக்க கோரி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அதிகரிக்கப்படுமா என மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.