தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி ஆகும். அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பொதுவாக இந்த நாளில் அரசு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால், தமிழகத்தில் செப்டம்பர் 18 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கபட்டது. ஆனால், பஞ்சாங்கப்படி செப்டம்பர் 17 ஆம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி என கூறி பலரும் அரசுக்கு 17 ஆம் தேதி விமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப். 17ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை 17 ஆம் தேதி என்று வெளியிடப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதன்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17 ம் தேதியில் இருந்து 18 ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) மாற்றி தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.