ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் முகாம்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் யானைகளை வளர்க்கும் யானை பாகன் பொம்மன்-பெள்ளி நடித்திருந்தனர். இந்த படம் ஆஸ்கார் விருதை பெற்ற நிலையில், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த ஆவண படத்தை பார்த்த பலரும் முதுமலை காட்டுக்கு சென்று அந்த யானைகளையும் அந்த படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியும் பார்த்து புகைப்படம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில், யானை பாகனாக நடித்த பெள்ளிக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கியுள்ளார்.