தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நகரில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தாலும் நாளுக்கு நாள் அதிகமான வெப்பநிலை நிலவுவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, இராமநாதபுரம், கரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.