அரசு அலுவலகத்தில் 600 ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய || IDIB Junior Assistant Recruitments 2024
IDIB Junior Assistant Recruitments 2024
IDIB Job: அரசு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஐ.டி.பி.ஐ வங்கியில் 600 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் அறிவிப்பின்படி மொத்தம் 600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.
பணி விவரங்கள் Post :
Junior Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Agri Asset Officer (AAO)
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc/B Tech/B.E in Agriculture, Horticulture, Agriculture engineering, Fishery Science/Engineering, Animal Husbandry, Veterinary science, Forestry, Dairy Science/Technology, Food Science/technology, Pisciculture, Agro Forestry, Sericulture பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.10.2024 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை:
ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Onlineல் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200, மற்றவர்களுக்கு ரூ. 1000.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.