மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடுமையாகி ஜூலை மாதம் 15 முன் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதால், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வழக்கமாக டிஏ உயர்வு ஜூலை 1,2023 முதல் அமலுக்கு வரும். ஆனால் தற்போது வரை அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
டிஏ உயர்வு அறிவிப்பு தேதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும் செப்டம்பர் 2023ல் இது குறித்து முடிவு வெளியாகும் என ஊடக அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்காக ஒரு கோடி அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.