ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேசப்பற்று உடையவர்கள் என வெளிபடுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது தேச பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தேசிய கொடியை ஏற்றி இந்தியாவுக்கு கௌரவித்த முறையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரையிலும் மூன்று நாட்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்பிறகு, hargartiranga.com என்கிற இணையதள பக்கத்தில் அரசு ஊழியர்கள் வீடுகளில் ஏற்றப்படும் மூவர்ணக் கொடியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் கட்டாயமாக அரசு ஊழியர்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.