ரேஷன் கடைகளில் தொடர்ந்து பலன் பெற இது கட்டாயம் – பொதுமக்களுக்கு அறிவிப்பு!
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் நிலையில் செப்.30 தேதிக்குள் பொதுமக்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகள்:
இந்தியாவில் ஏழை மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை மக்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் அதற்கு e-KYC சரிபார்ப்பு அவசியம் ஆகும். அந்த வகையில் பொதுமக்கள் செப் 30 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்கலாம். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
முன்னதாக அரசு eKYC சரிபார்ப்பு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 என அறிவித்தது. மேலும் eKYC சரிபார்ப்பைச் செய்யாத நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. e-KYC செய்யாத நுகர்வோரின் ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த ரேஷன் பொருள்களை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.