இந்தியன் வங்கியின் மூலம் எளிதாக Personal Loan பெறுவது எப்படி? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள்

இந்தியன் வங்கியின் மூலம் எளிதாக Personal Loan பெறுவது எப்படி? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள்

Indian Bank Personal Loan Apply: நாளுக்கு நாள் மனிதர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் காரணமாக அதிகப்படியான மக்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் கடன்களை பெறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் வங்கிகளில் லோன் பெறுவதற்கு நகையோ அல்லது மற்ற பத்திரங்களோ தேவையில்லை. உங்களுடைய சிபில் ஸ்கோரை பார்த்து வங்கியில் தற்போது கடனைத் தர முன்வந்துள்ளனர்.

இந்தியன் வங்கி (Indian Bank) மூலம் நீங்கள் தனிநபர் கடன் (Personal Loan) பெற விரும்பினால், அதன் செயல்முறைகள் மிகவும் எளிமையாக உள்ளன. இந்த தனிநபர் கடன்களை, வீட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள், கல்வி செலவுகள் போன்ற எதற்காவது உபயோகிக்கலாம். இதற்கான முழு செயல்முறையைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

தனிநபர் கடன் பெற தகுதிகள்

இந்தியன் வங்கியில் தனிப்பட்ட கடனைப் பெற, நீங்கள் குறிப்பிட்ட சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில், வயது 21 முதல் 58 அல்லது 65 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் துறையினர், சுயதொழில் ஆவார்களும் தகுதியுடையவர்கள்.

இதோடு, உங்கள் மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நீண்ட காலமாக வேலை செய்பவர்களுக்கு 2 வருட அனுபவம் தேவைப்படும். இதுவே, தனிநபர் கடன் பெற தகுதிகள் ஆகும்.

தேவையான ஆவணங்கள் 

நீங்கள் தனிப்பட்ட கடனைப் Personal Loan பெற  சில முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடையாள அட்டையாக, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வழங்கலாம். இதோடு, மின்சார கட்டணம் அல்லது வாடகைச்சீட்டு போன்ற ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படும்.

வேலை மற்றும் வருமானத்தை நிரூபிக்க, கடந்த 3-6 மாத Salary Statement மற்றும் வங்கி கணக்கு நகல்கள் தேவையாகின்றன. பான் கார்டு வழங்குவது கட்டாயமாகும். மேலும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும்.

வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் முறை

இந்தியன் வங்கி கிளையில் நேரில் செல்வதற்குப் பதிலாக, உங்கள் வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் தனிப்பட்ட கடனைப் Personal Loan பெற முடியும். இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.indianbank.inஅல்லது மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பர்சனல் லோன் Personal Loan என்ற பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களை அப்லோடு செய்து சப்மிட் செய்ய வேண்டும். இந்த தகவல் அவர் செலக்ட் செய்த எஸ் பி ஐ வங்கிக்கு செல்லும். அதிகாரி அந்த தகவலை சரிபார்த்து, தகவல் அனைத்தும் உண்மையே என்றால் அவருக்கு 2-5 வேலை நாட்களுக்குள் லோனுக்கான அப்ரூவல் கொடுப்பார்.

நேரில் சென்று விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகாமையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று அங்கு பர்சனல் லோன் Personal Loan காண விண்ணப்ப படிவத்தை வாங்கி பில் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அட்டாக் செய்து பேங்க் மேனேஜரிடம் கொடுக்க வேண்டும்.

பேங்க் மேனேஜர் அவர் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியா என்பதை ஆராய்ந்து சரி எனில் அவர் அந்த நபருக்கு லோன் தருவதற்கான ஆணையை வெளியிடுவார்.

கடன் தொகை வழங்கும் முறை

ஒருவர் பர்சனல் லோனுக்கு அப்ளை செய்த விண்ணப்பத்தை இந்தியன் வங்கி ஏற்றுக் கொண்டால் அவருக்கு பர்சனல் லோன் ஆனது வங்கி மூலம் கிடைக்கும். இந்தத் தொகையானது அந்த நபருடைய வங்கி கணக்கில் நேரடியாக அனுப்பப்படும். இதனை அவர் பெற்று தன்னுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடன் பெறுபவர் இந்தியன் வங்கியின் விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு கடன் தொகையை பெறவும். இவ்வாறாக இந்தியன் வங்கியின் மூலம் ரூபாய் 8 லட்சம் வரை நீங்கள் பர்சனல் லோனை Personal Loan பெறலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *