கலைஞரின் கனவு இல்ல திட்டம்: ரூபாய் 3 லட்சம் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது?
Kalaingar Kanavu Illam Scheme: இன்றைய சூழ்நிலையில் பல பேர் சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சிலர் குடிசை அமைத்து அதில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையை மாற்ற தமிழக அரசு பல நடவடிக்கைகளை கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு எப்படி வீடு கட்ட உதவித்தொகை வழங்குகிறதோ அது போன்று தமிழக அரசும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அந்த திட்டத்தின் பெயர் தான் கலைஞரின் கனவு இல்லாத திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் என்ன திட்டத்தின் செயல்முறைகள் என்ன இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
கலைஞரின் கனவு இல்ல திட்டம்:
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் முக்கிய நோக்கம் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்குவதாகும். தமிழகத்தில் பல பேர் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ஒரே இலட்சியம் தாம் ஒரு கான்கிரீட் வீட்டைக் கட்டி அதில் குடி பெயர்வது என்பது ஆகும். அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தருவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதன் காரணமாகத்தான் தமிழக பட்ஜெட்டில் 3100 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டுக்கும் ரூபாய் 3.10 லட்சம் என்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியில் உள்ளது அதனைப் பற்றி விரிவாக காண்போம்.
கலைஞரின் கனவு இல்ல அரசு வழிகாட்டு நெறிமுறைகள்:
- ஒவ்வொரு வீடும் 360 சதுர அடியில் கட்டப்பட வேண்டும். இந்த வீடுகள் சமையல் அறையுடன் கட்டித் தரப்பட வேண்டும். இதில் 300 அடி ஆர் சி சி கூரையுடன் மற்றும் மீதமுள்ள 60 அடி தீ பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும்.
- வீட்டின் சுவர்கள் செங்கல் இன்டெர்லாக் பிரிக் ஏசிசி பிளாக் உள்ளிட்ட பொருட்களால் கட்டப்பட வேண்டும்.
- இந்த திட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் மண் சுவர்களால் சுவர் ஏற்படுத்தக் கூடாது. திட்டம் குறைவான செலவு மற்றும் விரைவான கட்டுமான தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தப்படும்.
- திட்டத்தின் பயனாளியை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குனரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த திட்டத்தில் வீடு கட்ட மொத்தமான தொகை 3.5 லட்சம் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வீடு கட்டி முடிக்கப்பட்ட பிறகு வீட்டின் சுவற்றில் தனி வண்ணத்தில் பயனாளியின் பெயர் கட்டப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் கட்டாயம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25 ஆம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற வீதம், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.