LICல் பெண்களுக்கான பிரத்யேக இன்சூரன்ஸ் திட்டம் – முழு விவரம் இதோ!
இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் பெண்களுக்கான சிறந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்சுரன்ஸ் திட்டம்:
இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு என செயல்படுத்தி வரும் ஆதார்ஷிலா (Aadharshila) பாலிசி திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதாவது இந்த திட்டம் பெண்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது இதன் மூலம் காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் ஒருங்கிணைந்த பலன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மெச்சூரிட்டியின் போது நிலையான தொகையை நிதி பலனாக பெற முடியும்.
அதே போல பாலிசி ஆக்டிவாக இருக்கும் போது பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். மேலும் திட்டத்தில் சேரும் பெண்களின் வயது 8 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். இந்த பாலிசி காலம் 10 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெறலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்கடன் வாங்கலாம்.