தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியல் – மீண்டும் வாய்ப்பு அளிக்கும் அரசு! முழு விவரம்!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான பயனாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுந்செய்தி அனுப்பி வைக்கப்படும் எனவும், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
உரிமைத்தொகை திட்டம்:
தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இரண்டு கட்ட முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம் போன்றவை நடைபெற்றுள்ளது. அதில் விண்ணப்பித்த சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களில் சந்தேகம் இருந்தால் அதனை நேரில் கள ஆய்வு செய்து , வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி பயனாளர் பட்டியல் தயார் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டவர்களுக்கு அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிவிக்கப்படும். அதே போல இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். நிகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்கள் கழித்து மீண்டும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.