மதுரையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் – இந்த வழியாக செல்ல முடியாது.. இது தான் நாளை ரூட்!
மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே நாளை தமிழக அதிமுக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதை மாற்றம்:
மதுரையில் நாளை அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு, தங்குமிடம், கழிப்பறை வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை வரவுள்ளனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு காவல்துறை போக்குவரத்து பாதைகளை மாற்றம் செய்துள்ளது.
அதாவது மதுரை வழியாக வரும் வாகனங்கள் நாளை மாற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு திருமங்கலம், வாடிப்பட்டி வழியாக வாகனங்கள் செல்லலாம். மேலும் தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர், திண்டுக்கல் வழியாகவும் சென்னையில் இருந்து தென் மாநிலத்திற்கு வரும் வாகனங்கள் கொண்டாம்பட்டி, நத்தம் வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.