தமிழகத்தில் இன்றே குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 அனுப்பியாச்சு – உடனே செக் செய்யுங்க!
தமிழகத்தில் நாளை தான் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்றே ரூ.1000 வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், ரூ.1000 உரிமைத்தொகை பெற தேர்வானவர்களுக்கு தற்போது வரை குறுஞ்செய்தி வராத நிலையில் குடும்ப தலைவிகள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், செப்.18ம் தேதி முதல் குடும்ப தலைவிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இன்றிலிருந்தே ரூ.1000 வங்கி கணக்கிற்கு வரவு வைக்க துவங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வரவு வைக்க முடியாது என்பதால் இன்றே துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வந்துவிட்டதா என செக் செய்துகொள்ளவும்.
ஒரு வேளை, ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காத பட்சத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.1000 பெறாத குடும்ப தலைவிகள் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும்.
BREAKING : வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000ஐ பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியுள்ளது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நேற்று ரூ.1 செலுத்தும் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 செலுத்தப்படுகிறது. தங்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 கிரெடிட் ஆனதையடுத்து, தமிழக அரசுக்கு நன்றி கூறி பலரும் ஷேர் செய்கின்றனர்.
Varavillai