1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 அன்று மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க

தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

அதன்படி செப்டம்பர் 10 அன்று மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை

உதவித்தொகை

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “நான் முதல்வன் – போட்டித் தேர்வு” என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அது தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசு நடத்தும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கத் தேவையான உதவிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பிரிவானது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி, திறன்களை வளர்த்துக் கொள்ளும் உதவிகளைச் செய்யவிருக்கிறது. இது குடிமைப் பணித் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி பெறும் எண்ணிக்கையை அதிகரிக்கும்  முயற்சி.

2023-24க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது.

UPSC: மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை; யாருக்கெல்லாம் கிடைக்கும்? பெறுவது எப்படி?

அதன்படி ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் முதல் நிலை (PRELIMS) தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு செப்டம்பர் 10 அன்று “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2023” எனப்படும் மதிப்பீட்டு தேர்வை நடத்தி, தேர்ந்தெடுக்கும் 1000 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவானவர்களுக்கான 950 இடங்களுக்கு வயது வரம்பாக குறைந்தபட்சமாக 21 வயது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயதினை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கூறப்பட்டுள்ளது. அதன்படி,

  • பட்டியல் சமூகத்தினர் – 37 வயது
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் – 42 வயது
  • பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் – 35 வயது
  • பொதுப்பிரிவினர் – 32 வயது

மாதாந்திர உதவித்தொகைத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்படும் 1000 நபர்களில், 50 இடம் முதல் முறையாக குடிமைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கான வயது வரம்பாக 21 வயதில் இருந்து 22 வயதை எட்டாமல் இருக்க வேண்டும் ( 01.08.2024 ஆம் தேதிக்குள்).

UPSC: மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை; யாருக்கெல்லாம் கிடைக்கும்? பெறுவது எப்படி?

மருத்துவம், ஒருங்கிணைந்த பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய சான்றுகளைச் சமர்ப்பித்தால் வயது தளர்வு வழங்கப்படும். வயது தளர்வு தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கே (TNSDC) உண்டு.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் தேர்வு எழுத ஏதேனும் ஒரு மையத்தைத் தேர்வு செய்ய வேண்டும் தேர்வு மையத்தின் இடம் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும்.தேர்வு மையங்களை அதிகரிக்கவும் குறைக்கவும் அதற்கேற்ப விண்ணப்பதாரர்களை வேறு மையங்களுக்கு மாற்றவும் TNSDC-க்கு (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு) முழுஅதிகாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வுக்கு வர வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக 17.08.2023 அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணையதளத்தின் லிங்கின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு

தேர்வு

ஏற்கனவே மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள், இந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. இந்த உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் 2024-ம்ஆண்டு மே 26-ம் தேதி நடைபெறவுள்ள ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து, ஆவணங்களை TNSDC க்கு சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நடைபெறும் தேர்வுமுறை OMR அடிப்படையில் நடைபெறுகிறது. அதில் 150 கேள்விகள் (100 பொது அறிவு + 50 CSAT) கேட்கப்படும். தவறான பதில்களுக்கு எதிர் மதிப்பெண்கள் இல்லை. கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே கொடுக்கப்படும். மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடத்திட்டத்தினையும் அறிவித்துள்ளது அதில் பொது அறிவு சார்ந்த பிரிவில், naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

OMR அடிப்படையிலான தேர்வு

OMR அடிப்படையிலான தேர்வு naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

1. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்போதைய நிகழ்வுகள்.

2. இந்தியாவின் வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம்.

3. இந்திய மற்றும் உலகப் புவியியல்.

4. இந்திய அரசியல் மற்றும் ஆட்சி அரசியலமைப்பு, அரசியல் நடைமுறை, பஞ்சாயத்து ராஜ் பொதுக் கொள்கை, உரிமைகள் சிக்கல்கள்.

5. பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு – நிலையான வளர்ச்சி,வறுமை, உள்ளடக்கிய வளர்ச்சி, மக்கள்தொகை சமூகத் துறை முயற்சிகள்.

6.சுற்றுச்சூழல் சூழலியல், பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம்பற்றிய பொதுவான சிக்கல்கள்.

7. பொது அறிவியல். naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

UPSC: மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை; யாருக்கெல்லாம் கிடைக்கும்? பெறுவது எப்படி?

மேலும் CSAT பிரிவில், naan-mudhalvan-scheme-offer-7500-per-month-to-the-civil-service-aspirants

1.ஆங்கில புரிதல்

2. தொடர்பாடல் திறன் உட்பட தனிப்பட்ட திறன்கள்

3.தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வுத் திறன்

4. முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது

5. பொது மன திறன்

6. அடிப்படை எண் (எண்கள் மற்றும் அவற்றின் உறவுகள், அளவின் வரிசைகள் போன்றவை – பத்தாம் வகுப்பு நிலை)

7. தரவு விளக்கம் (விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் போன்றவை – பத்தாம் வகுப்பு நிலை)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *