ரேஷன் கடைகளுக்கு புதிய விதிமுறை – விரைவில் நடைமுறை!

ரேஷன் கடைகளில் ஏற்படும் ஊழலை தவிர்க்க அரசானது புதிய விதிமுறையை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

கடைக்கான விதிமுறை:

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்காக வழங்கப்படும் உணவு பொருட்களில் ஊழல் நடைபெறுவதாகவும், இந்த ஊழலில் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் பங்கேற்பதாகவும் அரசுக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அதாவது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவதாகவும், பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை எனவும் பொது மக்கள் குறை கூறுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு உ.பி.யின் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் EWS என்னும் மின் எடை அளவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அதாவது ரேஷன் கார்டுதாரர்களின் அளவுகள் EWS மென்பொருளில் பதிவு செய்யப்படும். இ-பிஓஎஸ் இயந்திரத்துடன் இணைக்கப்பட ஃபோர்க்குடன் உள்ள மென்பொருளில் பயனர்களின் கைவிரல் வைக்கப்பட்டால் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட சரியான எடை மின் எடை அளவீடு மூலம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இம்முறையில் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் ஊழல் செய்ய இயலாது. எனவே இந்த முறையானது 434 கடைகளில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இம்முறையானது கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *