பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்! விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்

பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்! விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்

PM Free Sewing Machine Scheme: இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் சம பங்கு மற்றும் சம ஊதியம் ஆகியவற்றுக்கான சட்டங்களும் இயற்றப்பட்டு தற்போது நடைமுறையிலும் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்:

வீட்டில் உள்ள பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் சுய தொழில் செய்து அவருடைய வாழ்வில் முன்னேற உறுதுணையை ஏற்படுத்தி தருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தையல் எந்திரம் பெற தகுதிகள் என்ன எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

இலவச தையல் இயந்திரம் பெற தகுதிகள்:

இலவச தையில் இயந்திரத்தை பெரும் பெண், இந்திய குடிமகளாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே அவர் தையல் தொழில் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த தையல் இயந்திரத்தை பெற விரும்பும் பெண்ணின் வயது 18 விட அதிகமாக இருக்க வேண்டும். இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர் விஸ்வகர்மா யோஜனா மூலம் தையல் இயந்திரம் பெற தகுதியானவராக கருதப்படுவார்.

இலவச தையல் இயந்திரம் பெற தேவையான ஆவணங்கள்:

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா மூலம் தையல் இயந்திரத்தை பெற பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, அடையாள அட்டை, முகவரி சான்று, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் மொபைல் நம்பரை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு https://pmvishwakarma.gov.in என்ற இணையதள முகவரியில்  விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையத்தில் விண்ணப்பிக்கத் தெரியவில்லை எனில், இ-சேவை மையங்களுக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா மூலம் தையல் இயந்திரம் ஒன்று வாங்க ரூ.15,000-ஐ மத்திய அரசு அளிக்கிறது. விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்படும்‌. இந்தத் தொகையைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களின் தையல் தொழிலை நன்முறையில் முன்னேற்றிக் கொள்ள முடியும்.

மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி, பிரதம மந்திரியின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் தையல் இயந்திரத்தை பெற்று பெண்களாகிய நீங்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேறலாம். எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி இலவச தையல் இயந்திரத்தை பெற்று கொள்ளவும்.

You may also like...

4 Responses

  1. The most important in thiyal mission is important in my life

  2. Thiyal mission important for the women’s

  3. Kavitha says:

    Help panuga romba nalla irrukum free

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *