மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் தேதி அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி
PM Kissan Scheme 18th Instalment: பிரதம மந்திரியின் பி எம் கிசான் திட்டம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு விவசாயின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு சிறந்த நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகள் நேரடியாக அரசின் நிதி உதவியை பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
பி எம் கிசான் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவெனில், இடையூறுகளின்றி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படுகிறது. இடைத்தரகர்கள் அல்லது ஊழல் இல்லாமல், பணம் நேரடியாக செலுத்தப்படுவதால், விவசாயிகள் முழுமையாகப் பலனடைகிறார்கள்.
இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த தொகையை ஒரே தடவையாக இல்லாமல், மூன்று தவணைகளாக (ஒவ்வொரு மாதம் ரூ. 2,000) பெறுகிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் அவர்களுடைய நாள்பட்ட தேவைகளை சமாளிக்க உதவுகின்றது.
பி எம் கிசான் திட்டத்தின் நன்மைகள்:
- பி எம் கிசான் நிதி உதவி விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
- விவசாய உற்பத்தியில் ஏற்றம் ஏற்பட, விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்த்துவது இதன் நோக்கம் ஆகும்.
- இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் நிதி உதவி நேரடியாகக் கிடைப்பது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.
18வது தவணை தொகை
தற்போது 18-வது தவணைத் தொகையான ரூபாய் இரண்டாயிரம் எப்போது வங்கிகளில் வரவு வைக்கப்படும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது விவசாயிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் விவசாயியாக இருந்து இந்த தொகையை பெறுபவராக இருந்தால் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கு சரிபார்த்து தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
I’m joining the help pls help mee