இனி ரேஷன் பொருட்களை நீங்க இப்படி தான் வாங்குவிங்க! அரசு கொண்டுவந்த புதிய மாற்றம்

இனி ரேஷன் பொருட்களை நீங்க இப்படி தான் வாங்குவிங்க! அரசு கொண்டுவந்த புதிய மாற்றம்

Ration Goods Packet Sales Implement: தமிழகத்தில் ரேஷன் அட்டையின் மூலம் ஏழை எளிய மக்கள் குறைவான தொகையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். இந்த ரேஷன் கடைகள் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம்:

தமிழகத்தில் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இந்த மாதம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் காரணமாக ரேஷன் அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலை தற்போது சரியாகி உள்ளதால் இந்த மாதம் புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகளில் எடை குறைவு:

பெரும்பாலான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் கோதுமை பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பொருட்களை மக்கள் பெரும்போது ரேஷன் கடைகளில் எடை மற்றும் அளவு குறைவாக உள்ளதாக பெருமளவில் மக்களால் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

இந்த குறைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகளில் புதிய மாற்றத்தை கொண்டுவர திட்டம் தீட்டி உள்ளது. அதனைப் பற்றி விரிவாக காண்போம்.

ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் பெருமளவில் எடை குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சோதனை முறையில் சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்த தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை வீதம் 234 தொகுதிகளிலும் இந்த சோதனை முறையை மேற்கொள்ள உள்ளது.

வருங்காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த பாக்கெட் மூலம் பொருட்களை வழங்கும் முறை செயல்படுத்தபட உள்ளது உணவு பாதுகாப்பு வழங்கல் துறை. இதன் காரணமாக மக்களுக்கு சரியான முறையில் பொருட்களும், ரேஷன் கடை மூலம் விநியோகம் செய்பவர்களுக்கு விரைவான காலத்தில் மக்களுக்கு பொருட்களை வழங்கவும் வகை செய்யப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *