இந்திய ரயில்வே துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3445 பணியிட அறிவிப்பு! விவரங்கள் இதோ
RRB NTPC Job: இந்திய ரயில்வே துறையில் 3445 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தியன் ரயில்வே RRB NTPC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த விவரங்களை கவனமாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி விவரங்கள்
நாடு முழுவதும் இந்திய ரயில்வே துறை மூலம் 3445 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விபரம்
- Commercial – Ticket Clerk – 2022
- Accounts Clerk – Typist – 361
- Junior Clerk – Typist – 990
- Trains Clerk – 72
கல்வித் தகுதி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என இந்திய ரயில்வே துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. எனவே இந்த பணியிடங்களுக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வயது விவரங்கள்
இந்திய ரயில்வே துறையின் 3445 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தாராளமாக இந்த பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளமும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளவும்.
சம்பள விவரங்கள்
இந்த 3445 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு சம்பளம் ரூபாய் 18000 முதல் 25 ஆயிரம் வரை கிடைக்கும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு
- Commercial – Ticket Clerk – 21,700
- Accounts Clerk – Typist – 19,900
- Junior Clerk – Typist – 19,900
- Trains Clerk – 19,900
தேர்வு செய்யப்படும் முறை
இந்த RRB பணியிடங்களுக்கு இரண்டு நிலைகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் நிலை தேர்வு கணினி வழி தேர்வு முறையில் நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வு எழுதுவார்கள். இந்த இரண்டு நிலைகளையும் கிளியர் செய்பவர்கள் இந்த பணியிடங்களை பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ சென்று அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
இந்த பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூபாய் 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி மற்றும் பெண்கள் ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 01 அக்டோபர் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 அக்டோபர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply
Good job