தமிழகத்தில் தபால் மூலமாக வரும் ரூ. 1000 உரிமைத் தொகை – குடும்பத் தலைவிகள் குஷி!
குடும்பத் தலைவிகள் பலரின் வங்கிக் கணக்கு செயல்படாத நிலையில் உள்ளதால் தபால் துறை மூலமாக பலருக்கு ரூ. 1000 உரிமைத் தொகை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000 உரிமைத் தொகை:
தமிழகத்திலும் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ. 1000 அனுப்பப்பட்டுள்ளதால் பெண்கள் குதூகலத்தில் இருந்துனர். இந்நிலையில், ரூ. 1000 உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த பலருக்கு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் முகாம்கள் துவங்கப்பட்டு மேல்முறையீடு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இதுவரை ரூ. 1000 உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டு பொதுமக்களின் வங்கி கணக்கில் சில பிரச்சனைகள் இருந்ததால் சில குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ. 1000 செலுத்தப்படவில்லை.
இந்நிலையில், அந்த குடும்பத் தலைவிகளின் முகவரிக்கு தபால் துறை மூலமாக ரூ. 1000 உரிமைத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்பாராத நேரத்தில் ரூ. 1000 உரிமைத் தொகை கிடைத்துள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..