தமிழகம் முழுவதும் இப்போது தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க முடிவு செய்துள்ளனர்.

sale-of-coconuts-in-tn-cooperative-stores
இதன்படி இப்போது முதற்கட்டமாக விவசாயிகளிடம் இருந்து பத்தாயிரம் தேங்காய் கொள்முதல் செய்து சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கூடிய விரைவில் ரேஷன் கடைகளிலும் தேங்காய் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.