9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி!
கேரள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் 9 & 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகையை பெற செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் உதவித்தொகை தொடர்பான விவரங்களை செப். 30ம் தேதிக்குள் முடித்து அனுப்பிட அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வரும் 2024 – 2025ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்திற்குள் உதவித்தொகை தொடர்பான பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.