செல்வமகள் சேமிப்பு திட்டம்.. மத்திய அரசின் “சுகன்யா சம்ரிதி யோஜனா”.. பெண்களுக்கான அருமையான சேமிப்பு

சென்னை: உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால், செல்வமகள் திட்டத்தை தாராளமாக துவங்கலாம்.. இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று இந்த திட்டத்துக்கு பெயர். இந்த திட்டத்தில் எப்படி சேருவது தெரியுமா? பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சிறு சேமிப்புத் திட்டம்தான் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி, இதை தொடங்கிவைத்திருந்தார். இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் மற்ற திட்டங்களை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம்.

 

 

selvamagal-semippu-thittam-and-what-are-the-advantages-of-sukanya-samriddhi-yojana-savings-scheme

selvamagal-semippu-thittam-and-what-are-the-advantages-of-sukanya-samriddhi-yojana-savings-scheme

குறைந்தபட்சம் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சிறு சேமிப்பு திட்டம் என்பதால் மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை… ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம்.

சேமிப்பு திட்டம்: நீங்கள் சேமிக்கும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்… நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படும்…

உதாரணத்துக்கு, மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்து கொண்டால், வருடத்துக்கு 24,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டிவரும். அப்படியானால், 15 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை 3.60 லட்சம் ரூபாயாகும்.. இதில், 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுவதால், வட்டி விகிதத்தில் 21 வருடங்கள் கழித்து மெச்சூரிட்டியின்போது மொத்த ரூபாய் 11,16,815 கிடைக்கும். அதாவது, வட்டி மட்டுமே உங்களுக்கு 7.56 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது..

பெண் குழந்தைகள்: பெண் குழந்தைக்கு 18 வருடங்கள் நிறைவடைந்துவிட்டால், தேவைக்காகவும் இடையிலேயே பணத்தை எடுத்து கொள்ள முடியும். 15 வருடங்களும், நீங்கள் செலுத்திய பணத்திற்கு 8 சதவீதம் வட்டியுடன் 21 வருடங்கள் கழித்து பெற்றுக்கொள்ளலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் வட்டித்திருத்தம் செய்யப்படுகிறது… கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியிருந்தது.. ஏற்கனவே, இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கிய நிலையில், இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது.

யார் யார் கணக்கை துவங்கலாம்?: இந்த திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம். குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும். இரண்டாவது, பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக்கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம். பணத்தைச் சரியாக கட்டதவறினால், டெபாசிட்டுடன் வருடத்துக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்த வேண்டி வரும். அதற்குபிறகுதான், கணக்கை புதுப்பிக்க முடியும்.

விதிமுறைகள் என்னென்ன: வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்பி நிறுத்த வேண்டும். இந்த SSA 1 படிவத்தில் பெண் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவல் போன்றவற்றை நிரப்ப வேண்டும். அதேபோல, குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள், சான்றுகளையும் நிரப்பிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக வங்கி அல்லது தபால்நிலையம் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யும்..

அப்போது உடனே உங்களுக்கான பாஸ்புக் தந்துவிடுவார்கள். டவுன்லோடு: போஸ்ட் ஆபீஸ்களில் இந்த கணக்கினை தொடங்கலாம்.. அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். ஒருவேளை நேரடியாக போஸ் ஆபீஸ் போக முடியாவிட்டால், ஆன்லைன் மூலமாகவே ஆக்டிவேட் செய்ய முடியும். இது தவிர பொதுத்துறை வங்கிகளான SBI, போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *