தமிழகத்தில் முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 500 மதிப்பெண்களுக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் என மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும் 11 ஆம் வகுப்புக்கும் 600 மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒரிஜினல் மார்க் சீட்டை பாதுகாப்பு காரணங்களுகாக பலரும் அதனை லேமினேஷன் செய்கின்றனர். இதுபோன்ற செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மாணவர்களுக்கு . ஏனென்றால், பிற்காலத்தில் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும் என்பதால் மதிப்பெண் சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.