தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று. சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது
LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=RGOWQvfUb04
LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
இதில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு 9 மணிக்குள் வந்து அடைகிறார். தொடர்ந்து ஒன்பது மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்குள் முடிவடை இருக்கிறது.
மேலும் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார்
மேலும் விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருக்கும் மாணவர்களுடன் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வருகை தரும் மாணவ மாணவிகளுக்கும் உடன் வருகை தரும் உறவினர்களுக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் பட்டியல்
• சாதம்
• வடை
• அப்பளம்
• அவியல்
• வெற்றிலை பாயாசம்
• மோர்
• மலாய் சான்விச்
• இஞ்சி துவையல்
• தயிர் பச்சடி
• அவரை மணிலா பொரியல்
• உருளை காரகறி
• வத்தக் குழம்பு
• கதம்ப சாம்பார்
• ஆணியன் மணிலா
• தக்காளி ரசம்