தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஏழை குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேலும் விண்ணப்பிக்க வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
இந்த திட்டம் மூலம் நகர்ப்புற பெண்களை விட, கிராமப்புற பெண்கள் அதிகம் பயனடைந்து இருக்கின்றனர். ரூ.1000 என்பது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இந்த திட்டம் மூலம் கிராமப்புறங்களில் பண புழக்கம் அதிகமாக வழிவகை செய்கிறது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை பற்றியும் அவர் தெரிவித்துள்ளார்.