தமிழகத்தில் கொரோனாவின் இரு வேறு புதிய தீநுண்மிகள் கண்டுபிடிப்பு – வெளியான ஷாக் ரிப்போர்ட் !
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரு வேறு புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸ்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கியது. இதன் மூன்று அலை தாக்குதல் முடிவதற்குள் பல உயிர்கள் பலியாகி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி ஓமைக்ரான் தொற்றாக மாறியது. அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ்பிபி என்ற புதிய வகை தீநுண்மி உருவானது.
தற்போது மாநில பொது சுகாதாரத்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில் கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதில் 2085 சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் 420 மாதிரிகள் எக்ஸ்பிபி வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 98 மாதிரிகளை விரிவான நுண் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில், இது வரை உலகில் கண்டறியப்படாத இருவேறு கொரோனா உருமாற்றமான புதியதீ நுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.