
tamilnadu-school-college-3-days-leave
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!
தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!
தமிழகத்தில் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய தினங்களை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கியது. நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகின்றனர். செய்யும் தொழிலையும் கல்வியையும் போற்றும் வகையில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
வெற்றி தரும் நாளாக விஜய தசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து நிறுவனங்களிலும் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அதன் படி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த முறை இவை இரண்டும் திங்கள் செவ்வாய் என வருவதால் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது