ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் அடிப்படையில் தேர்வு! உடனே விண்ணப்பீங்க

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் அடிப்படையில் தேர்வு! உடனே விண்ணப்பீங்க

TANUVAS Lab Assistant Job: வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தற்போது திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணி விவரங்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் இரண்டு திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 7.10.2024.

கல்வித்தகுதி

1 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு Master’s Degree in Natural or Agricultural Sciences/ M.V.Sc. படித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நான்கு ஆண்டுகள் அவர்கள் பணி அனுப்பவும் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே எந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

1 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு B.Sc./ Graduate Degree in Biotechnology / Microbiology/ Life sciences /Agricultural Sciences படித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விபரங்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 20,000 மற்றும் HRA தொகை சம்பளமாக வழங்கப்படும்.

வயது

திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் OaBC பிரிவினருக்கு மூணு ஆண்டுகளும் SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறைகள்

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றிய விவரங்களுக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவத்துறை https://tanuvas.ac.in/இணையதளத்திற்கு நேரடியாக சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 7.10.2024 அன்று நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

முகவரி

Poultry Disease Diagnosis and Surveillance Laboratory, Veterinary College and Research Institute Campus, Namakkal – 637 002

விண்ணப்ப தொடக்க தேதி: 25 செப்டம்பர் 2024

 

விண்ணப்ப கடைசி தேதி: 07 அக்டோபர் 2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *