கோவை மாநகராட்சி இயற்கை சூழலுடன் வளர்ந்து வரும் ஒரு மாநகராட்சியாக உள்ளது. இந்த கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதே போல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக குறிச்சி ரவுண்டானாவில் உள்ள மையத்தில் திருவள்ளுவரின் சிலை தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவரின் சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வர்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 20 அடி உயரமும் 2.50 டன் எடையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறம் என்ற வார்த்தை திருவள்ளுவரின் நெற்றியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அறம் என்ற சொல்லுக்கு பொருள் கடமை, தர்மம், புண்ணியம் என்று பொருள்படும் காரணத்தினால் திருவள்ளுவரின் நெற்றியில் இடம்பெற்றுள்ளது. இதன்படி இந்த திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டால் கோவையின் ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் முக்கியமான அடையாளமாக குறிச்சி பகுதி திகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர்.