
தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனடியாக அப்ளை செய்ய – TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024
Table of Contents
TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பல்கலைக்கழக மான்யத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கீழ்க்காணும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். (UGC/CSIR/JRF/NET/SLET/SLST). தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பணி விவரம்
தமிழக அரசில் உதவி பேராசிரியர் அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள் நான்காயிரம் (4000) உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உத்தேசமாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சம்பளம்:
தமிழக அரசில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு ரூபாய் 57700 முதல் 182400 வரை சம்பளம் கிடைக்கும்.
பாடப்பிரிவுகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணியிட வேலை தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் மற்றும் பல படங்களுக்கான உதவி பேராசிரியருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மதிப்பெண் அளவு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள், தங்கள் துறை சார்ந்த படங்களில், முதுகலைபட்டயபடிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றுருக்க வேண்டும். அதே போல ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் அல்லாதோர் தங்கள் துறை சார்ந்த படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணியிட வேலைக்கான அறிவிப்பு வெளியான நாள் 14.03.2024, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க துவங்கும் நாள் 28.03.2024, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 29.04.2024. தேர்வு நடைபெறும் நாள் 04.08.2024.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Notification Link:
Apply Link: