தமிழக மின்சார வாரிய தேர்வு – தேர்வர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்! கண்டிப்பாக படிங்க – TN Electricity Board Exam Cancel Refund Amount Apply 2024
TN Electricity Board Exam Cancel Refund Amount Apply 2024
தமிழ் நாடு மின்சார வாரியம் TNEB சூலை 01, 1957இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948ன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத்துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது.
இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 5318 காலியிடங்கள் வெளியிட்டது.
பணியிட விவரங்கள்:
இந்த காலியிடங்கள் அந்த அறிவிப்பில் Assessor பணிக்கு 1300 பணியிடங்கள், Junior Assistant (Accounts) பணிக்கு 500 பணியிடங்கள், Assistant Engineer (Electrical) பணிக்கு 400 பணியிடங்கள், Assistant Engineer (Mechanical) பணிக்கு 125 பணியிடங்கள், Assistant Engineer (Civil) பணிக்கு 75 பணியிடங்கள், Field Assistant (Trainee) பணிக்கு 2,900 பணியிடங்கள், Assistant Accounts Officer பணிக்கு 18 பணியிடங்கள் என அறிவித்திருந்தது. மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பை நிர்வாக காரணங்களுக்காக ரத்து தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB செய்தது.
தேர்வு கட்டணம் திருப்பி அளிக்க உத்தரவு:
தமிழ் நாடு மின்சார வாரியம் TNEB வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2021 ஆம் ஆண்டு அறிவித்த பணியிட அறிவிப்பில் தேர்வு கட்டணம் ரூபாய் 1000 செலுத்தியவர்களுக்கு தற்போது அக்கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு மின்சார வாரியம் TNEB பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு https://www.tangedco.org இணையதளத்தில் சென்று அதில் குறிப்பிட்டுள்ள விவரங்ககளை பூர்த்தி செய்தவர்களுக்கு தேர்வு கட்டணம் வங்கி கணக்கு மூலம் திருப்பி அளிக்க தமிழ் நாடு மின்சார வாரியம் TNEB முடிவு செய்துள்ளது. தேர்வு கட்டணத்தை திருப்பி பெற விவரங்களை பூர்த்தி செய்ய கடைசி நாள் 5.05.2024 ஆகும். விண்ணப்பத்தார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.