தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வுகள் – அரசின் அதிரடி உத்தரவு!!
தமிழக அரசு ரூபாய் ஆயிரம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பல்வேறு தகவல்களை புதிதாக அறிவித்துள்ளது. எனவே முன்னதாக விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
புதிய தளர்வுகள்:
தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதன்படி முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்றவைகளை பெறும் நபர்களை சேர்ந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இது குறித்து ஆலோசித்த அரசு தற்போது உரிமை தொகை திட்டத்திற்கான புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் போன்றவைகளில் ஓய்வூதியம் பெறும் குடும்ப நபர்களைக் கொண்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அனைவரும் பயன் பெறும் வகையில் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று தினங்களில் இதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் உரிமைத்தொகை தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் மட்ட அரசு அதிகாரிகள் விரைந்து முடிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆணையிட்டுள்ளார்.