தமிழ்நாடு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை; 1,450 காலிப்பணியிடங்கள், 10-ம் வகுப்பு தகுதி போதும்

TN Panchayat Secretary Job vacancy 2025
ஊராட்சித் துறை கிராம ஊராட்சி செயலாளர் வேலை(புகைப்படங்கள்- Samayam Tamil)
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தகுதிப் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்ப ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கிராம ஊராட்சி செயலர் வேலை 2025
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், எழுத்தர், காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
கிராம ஊராட்சி செயலர்1,450

வயது வரம்பு

  • இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி, உச்சப்பட்ட வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பொதுப்பிரிவு பிரிவினர் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வரை இருக்கலாம்.
  • ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்தியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியவர்கள் 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
  • முன்னாள் ராணுவ வீரர்கள் 18 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
  • பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், ஆதிதிடாவிடர், பட்டியல் பழங்குடியினர் பிரிவு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 55 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்
ஊராட்சி செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 2 கீழ் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ் மற்றும் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இனச்சுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே எடுத்துகொள்ளப்படும். இப்பணிக்கு நவம்பர் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களின் விண்ணப்பம் நவம்பர் 11 முதல் 24 வரை சரிபார்க்கப்படும். அதனைத் தொடர்ந்து, தகுதிவாயந்த விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, டிசம்பர் 4 முதல் 12-ம் தேதி வரை நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளியாகி, டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடக்கம்10.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்09.11.2025
விண்ணப்பம் சரிபார்த்தல்10.11.2025 – 24.11.2025
தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல்25.11.2025 – 03.12.2025
நேர்காணல்04.12.2025 – 12.12.2025
தேர்வு முடிவுகள்15.12.2025 – 16.12.2025
பணி நியமன ஆணை17.12.2025

10-ம் வகுப்பு தகுதிப் பெற்று அரசு பணியை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த ஆண்டுக்குள்ளாகவே அரசு பணி கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *