தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மழை நிச்சயம் – வானிலை அறிக்கை!!
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதாவது அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றும். நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18 முதல் 20 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்க 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இதே போல் வங்க கடலிலும் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.